சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) உக்ரைனில் நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி தலைமை வழக்கறிஞர் கரீம் கான், 39 நாடுகளால் வலியுறுத்தப்பட்டதை அடுத்து, உடனடியாக விசாரணையைத் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை உக்ரேனிய துருப்புக்கள் மாஸ்கோவின் தாக்குதலில் இருந்து நாட்டைப் பாதுகாக்கும் அதே வேளையில், படையெடுக்கும் ரஷ்யப் படைகளுக்கு எதிராக எதிர்த் தாக்குதல்களை நடத்துகின்றனர் என்று அதிபர் ஜெலென்ஸ்கியின் இராணுவ ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
மேலும் நமக்கான உதவி ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்து வருகிறது. எதிரியின் பலம் ஒவ்வொரு நிமிடமும் குறைகிறது.
நாங்கள் பாதுகாப்பது மட்டுமல்ல, எதிர் தாக்குதலும் செய்கிறோம், என்று ஆலோசகர் ஒரு தொலைக்காட்சி மாநாட்டில் தெரிவித்துள்ளார்.








































