ஹர்ஷ டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியதுடன் அதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள சிங்கள ஊடகமொன்று, இன்று காலை சபை அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ விசேட அறிக்கையொன்றை விடுத்ததாக தெரிவித்துள்ளது.
மேலும் ஹர்ஷ டி சில்வாவை தற்காலிக ஜனாதிபதியாக நியமிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாமல் ராஜபக்ஷ கூறியதுடன் அதற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது நாடாளுமன்றத்தை திறந்து வைப்பதற்கான மணியோசை ஒலிக்க ஆரம்பித்திருந்ததுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நாடாளுமன்றத்தில் பிரசன்னமாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








































