காக்கும் தாயாய் கற்பகத்தருவாய் ஆதிக்கம் செலுத்தும் ஆதியாய், கேட்கும் வரம் கொடுக்கும் அன்னையாய் பரிதவிக்கும் தாய் உள்ளம் குளிரச் செய்யும் அன்னை அவள் அருளால் மகிழ்வோம்.
அருள் வளம் செழிக்கும் அன்னை கரூர் மாரி கருணை பொலிவுடன் காக்கும் எல்லை தெய்வம் பூவாடைக்காரி பாவாடை கரூர் மாரி அன்னைக்கு நாளெல்லாம் திருவிழாதான். மதியத்தில் ஒன்றான அபிஷேகம் அவ்வப்போது சகோதரர் மாவடியான் துணை வர உற்சவராக பவனி உற்சவ அன்னைக்கு எடுக்கும் திருவிழா கம்பம் விடும் விழா.
இதில்தான் எத்தனை எத்தனை வேண்டுதல்கள். துன்பம், துயரம், வாழ்வில் மங்களம் தங்க மலர் பாவாடை, ஆயிரமாயிரமாய் உள்ளம் குளிர அன்னைக்கு நீர் சுமந்து ஊற்றுதல், எண்ணம் சிறக்க வண்ண வண்ண வாசனை மலர் சொரிதல், வயிறு, கண் வலி என துடிப்போர் அன்னை சன்னதியில் மாவிளக்கு வழிபாடு, குழந்தை வரம் வேண்டி பிள்ளை சுமத்தல், குழந்தை பிறந்து கரும்பு தொட்டில் சுமத்தல், உடல்நல, உள்ளம், உடல் நல குறை போக்க அக்னி வேண்டுதல்கள், ஒன்றோடு ஒன்று இணைந்து சுடரொளி அக்கினி கையில் ஏந்தி அன்னைக்கு சமர்ப்பித்தல்,
நலம் வேண்டி ஆலயத்தை சுற்றி அங்கப்பிரதட்சணம், இடை இன்னல்கள், குடும்பத்தில் பிரச்சினை, வாழ்க்கையில் வறுமை, அமைதியின்மை இவற்றிற்கு அம்மனை வேண்டி அலகு, நாவில் வேல், பறவை காவடி, அலகு காவடி, விமான அலகு காவடி என விதவிதமாய் அலகேந்தி, பால்குடம் சுமந்து, பச்சிளம் குழந்தைகளுக்கு முடி இறக்கி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி எத்தனை எத்தனை வழிபாடு கரூர் அன்னைக்கு. காக்கும் தாயாய் கற்பகத்தருவாய் ஆதிக்கம் செலுத்தும் ஆதியாய், கேட்கும் வரம் கொடுக்கும் அன்னையாய் பரிதவிக்கும் தாய் உள்ளம் குளிரச் செய்யும் அன்னை அவள் அருளால் மகிழ்வோம்.








































