அன்றாடம் நாம் படுத்து உறங்கும் நிலையினால் கூட நமது உடல் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. தற்போது எந்த நிலையில் படுத்து தூங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
எந்த நிலையில் படுத்து உறங்க வேண்டும்?
பின் முதுகுவலி உள்ளவர்கள் மல்லாந்து படுத்து, முழங்காலுக்கு அடியில் ஒரு தலையணையை வைத்துக் கொள்ளலாம். பின் முதுகுவலி இருப்பவர்கள் முதுகு தரையில் படும்படி மல்லாந்து படுத்து தூங்குவதே சிறந்தது.
ஒரு பக்கமாகத் தூங்குபவர்கள் இரு முழங்கால்களுக்கும் நடுவில் தலையணையை வைத்துத் தூங்கலாம். இடுப்பு, முழங்கால்வலி இருப்பவர்களுக்கு, பிரச்சினை சரியாக இது உதவும்.
வயிறு தரையில் படும்படிக் குப்புறப் படுத்துத் தூங்குவது கழுத்துக்கும் முதுகுக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும். அப்படித் தூங்குபவர்கள் அடிவயிற்றுப் பகுதியில் தலையணையை வைத்துத் தூங்கினால் பிரச்சினையைத் தவிர்க்கலாம்.
கழுத்து வலி உள்ளவர்கள் சமமான நிலையில் கழுத்து இருக்கும்படிப் படுக்க வேண்டும். குப்புறப் படுப்பதைத் தவிருங்கள், சுருட்டிய டவலை கழுத்துக்கடியில் வைத்துக்கொள்வதும் நல்லது.
தூக்கத்தில் மூச்சுத்திணறல், குறட்டை பிரச்சினை இருப்பவர்கள் ஒரு பக்கமாகவே அல்லது குப்புறப்படுத்தோ தூங்கலாம்.
தோள்பட்டைவலி உள்ளவர்கள் மல்லாந்து படுத்துத் தூங்கலாம். எந்தத் தோளில் வலி இருக்கிறதோ அந்த பக்கமாகப் படுப்பதை தவிர்க்கவும்.
நெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்கள் இரண்டு, மூன்று தலையணைகளை வைத்துக்கொண்டு, தலையை உயர்த்தி வைத்துப்படுக்கலாம்.
இந்த முறைகளைப் பயன்படுத்தியும் வலி சரியாகாமல் இருந்தால், காரணத்தை கண்டறிந்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம்.








































