3 சுற்றுகள் முடிவில் இந்திய ‘பி’ அணி 12 போர்டு பாயிண்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறது.
பெண்கள் பிரிவில் பல்கேரி முன்னிலையில் (11.5 போர்டு பாயிண்டில்) உள்ளது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது சுற்று ஆட்டம் நடந்தது. இந்த சுற்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியில் பங்கேற்ற 6 இந்திய அணியும் வெற்றி பெற்றன.
ஓபன் பிரிவில் இந்தியா ‘ஏ’ அணி 3-1 என்ற கணக்கில் சாரீசையும், இந்திய ‘பி’ அணி 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும், இந்திய ‘சி’ அணி 3-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தன.
பெண்கள் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தையும், இந்திய ‘பி’ அணி 3-1 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், இந்திய ‘சி’ அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தின.
3 சுற்றுகள் முடிவில் இந்திய ‘பி’ அணி 12 போர்டு பாயிண்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறது. பிரான்ஸ், இஸ்ரேல் 11.5 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உள்ளது.
இந்திய ‘ஏ’ 10.5 போர்டு பாயிண்டுடன் 6-வது இடத்திலும், இந்திய ‘சி’ அணி 18-வது இடத்திலும் (9.5) உள்ளன.
பெண்கள் பிரிவில் பல்கேரி முன்னிலையில் (11.5 போர்டு பாயிண்டில்) உள்ளது. இந்திய ‘ஏ’ 5-வது இடத்தில் (10.5) இருக்கிறது.
இந்திய ‘பி’ அணி 16-வது இடத்திலும், இந்திய ‘சி’ அணி 17-வது இடத்திலும் உள்ளது.
4-வது சுற்று ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்திய ‘ஏ’ அணி பிரான்சுடனும், இந்திய ‘பி’ அணி இத்தாலியுடனும், இந்திய ‘சி’ அணி ஸ்பெயினுடனும் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் இந்திய ‘ஏ’ அணி அங்கேரியுடனும் ‘பி’ அணி எஸ்டோனியாவுடனும், ‘சி’ அணி ஜார்ஜியாவுடனும் மோதுகின்றன.








































