Loading...
மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான பகுதிகளில் கடற்றொழிலாளர்கள் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
மத்திய மற்றும் தென் மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக இலங்கையின் கிழக்கு மற்றும் வடக்கு கடற்பரப்புகளிலும் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 55 தொடக்கம் 65 கிலோ மீட்டர் வேகத்தில் அதிகரித்துள்ளமையே இதற்கு காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
Loading...








































