Loading...
கொழும்பிலிருந்து பாடசாலை மாணவர்களுடன் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து வான் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மோதுண்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும், வானில் பயணித்த 6 பேரும் உயிரிழந்துள்ளனர். முச்சக்கரவண்டிச் சாரதி காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பேருந்தில் பயணித்த 42 பேர் படுகாமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Loading...
குறித்த பேருந்து சுமார் 50 அடி பள்ளத்தில் குடைசாய்ந்துள்ளதாகவும், அங்கு இருள் காரணமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...