Loading...
கொழும்பு, கல்கிஸை – பொச்சிவத்தயிலுள்ள வீடொன்றிலிருந்து ஆணின் சடலம் ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
119 என்ற பொலிஸாரின் அவசர தொலைபேசி இலக்கத்துக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சடலம் மீட்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பலாங்கொடையைச் சேர்ந்த 38 வயதான நபரே உயிரிழந்துள்ளார். பேருந்து சாரதியாகச் சேவையாற்றிய குறித்த நபர், தான் தங்கியிருந்த வாடகை வீட்டில் வீழ்ந்து கிடக்கின்றார் என்று அவருடன் தங்கியிருந்த ஒருவரால் உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
Loading...
இரத்த வௌ்ளத்தில் நிர்வாணமாக குறித்த சடலம் காணப்பட்டது என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
Loading...








































