டெக்னோ நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் பிரத்யேக டிராப் வடிவ ஹிஞ்ச் கொண்டிருக்கிறது.
புதிய ஃபோல்டபில் ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி மாடலை வெளியிட்டுள்ளது. முன்னதாக பிப்ரவரி மாத வாக்கில் நடைபெற்ற 2023 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் வெளியாகி உள்ளது.
புதிய டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி மாடலில் 7.85 இன்ச் 2K மடிக்கக்கூடிய 10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன், 6.42 இன்ச் 1080 பிக்சல் 10-120Hz LTPO AMOLED ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் ஏரோஸ்பேஸ் தர டிராப் வடிவ ஹிஞ்ச் உள்ளது. புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 50MP போர்டிரெயிட் கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 55 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகிவிடும்.
டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி அம்சங்கள்:
7.65 இன்ச் 2296×2000 பிக்சல் 2K+ 10-120Hz LTPO AMOLED மடிக்கக்கூடிய டிஸ்ப்ளே
6.42 இன்ச் 1080×2550 பிக்சல் FHD+ 10-120Hz LTPO AMOLED வெளிப்புற டிஸ்ப்ளே
ஆக்டா கோர் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர்
மாலி G710 MC10 GPU
12 ஜிபி ரேம்
256 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ஹைஒஎஸ் 13 ஃபோல்டு
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
13MP அல்ட்ரா வைடு கேமரா
50MP போர்டிரெயிட் டெலிபோட்டோ கேமரா
32MP (வெளிப்புறம்) / 16MP (உள்புறம்) செல்ஃபி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
5000 எம்ஏஹெச் பேட்டரி
45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
டெக்னோ ஃபேண்டம் V ஃபோல்டு 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 88 ஆயிரத்து 888 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனினை ரூ. 77 ஆயிரத்து 777 விலையில் வாங்கிட முடியும். விற்பனை நாளை (ஏப்ரல் 12) நடைபெற இருக்கிறது.








































