Loading...
யாழ்ப்பாணத்தில் மாங்காய் பறிப்பதற்கு முயன்றவர் தவறி வீழ்ந்து நேற்றிரவு(11.06.2023) உயிரிழந்துள்ளார்.
பண்டத்தரிப்பு – பிரான்பற்றைச் சேர்ந்த வன்னியசிங்கம் ரவீந்திரன் (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் சந்திக்கு அண்மையாகவுள்ள கட்டடத்துக்கு அருகில் வீதிக்கரையில் இவர் பயணித்த லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
Loading...
போதனா மருத்துவமனை
லொறியில் ஒரு காலும் மதிலில் ஒரு காலும் வைத்து ஏறி மாங்காய் பிடுங்குவதற்கு அவர் முயன்றபோது, எதிர்பாராதவிதமாகத் தவறி வீழ்ந்து காயமடைந்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார்.
Loading...








































