இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் மோகன் குவாத்ரா உத்தியோகபூர்வ விஜயமாக இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இவர் நேற்றையதினம் (11.07.2023) வந்தடைந்ததாக விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இவர் 2023, ஜூலை 20 ஆம் திகதி, திட்டமிடப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லி விஜயம் தொடர்பான ஏற்பாடுகளை குவாத்ரா மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணிலின் முதல் இந்திய விஜயம்
ஜனாதிபதி விக்ரமசிங்க 2022 இல் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கடற்றொழில், எரிசக்தி மற்றும் மின்சக்தி, வெளிவிவகார அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, காஞ்சன விஜேசேகர மற்றும் அலி சப்ரி ஆகியோர் ஜனாதிபதியுடன் இந்தியா செல்லவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.








































