தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசிகள் தொடர்பில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை என தொற்றுநோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த தடுப்பூசிகளை சிறுவர்களுக்கு கட்டாயமாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய தினம் (19.07.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கவனம் செலுத்த வேண்டும்
மேலும் அவர் கூறியுள்ளதாவது, தேசிய நோய்த்தடுப்புத் திட்டத்துக்காக கொண்டுவரப்பட்ட தடுப்பூசிகள் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரத்தை உறுதிப்படுத்தியவை மட்டுமே ஆகும்.
அதற்கிணங்க, நோயைத் தடுப்பதற்காக உரிய தடுப்பூசிகளை பிள்ளைகளுக்குப் பெற்றுக்கொடுக்க பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
இல்லையேல் பல நோய்கள் அதிகரிக்க இது ஒரு காரணமாக அமையும் எனவும் நிபுணர் டாக்டர் சமித்த கினிகே சுட்டிக்காட்டியுள்ளார்.








































