கறுப்பு ஜுலையின் 40 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கிளிநொச்சியில் நேற்று இடம்பெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் ஏற்பாட்டிலேயே இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, கட்சியின் பொதுச்செயலாளரான மருத்துவர் சத்தியலிங்கம், தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் நல்லதம்பி ஸ்ரீகாந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் பொதுச்செயலாளர் அனந்தி சசிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அரியநேந்திரன், சிவாஜிலிங்கம், உள்ளிட்ட அரசியற் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜுலைக் கலவரத்தில் உயிர்நீத்த மக்களுக்கு பொதுச் சுடரேற்றப்பட்டு, மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.








































