Loading...
கிளிநொச்சி வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
கிளிநொச்சியிலுள்ள விற்பனை நிலையம் ஒன்றில் இன்று பகல் ஏற்பட்ட தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ பரவல் தொடர்பில் தகவல் வழங்கப்பட்டதை அடுத்து கரைச்சி பிரதேச சபையின் தீ அணைப்பு பிரிவினர், கூடியிருந்த பொது மக்கள் மற்றும் வர்த்தகர்களின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
Loading...
இதே நேரம் மின்சார சபையினரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொண்டிருந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
தீ பரவலுக்கான காரணம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading...








































