Loading...
கலிபோர்னியாவைச் சேர்ந்த மூத்த ஜனநாயகக் கட்சி செனட்டரும், அமெரிக்க அரசியலில் பெண்களுக்கான முன்னோடியுமான டயான் ஃபெயின்ஸ்டீன் காலமானார்.
வோஷிங்டனில் உள்ள தனது வீட்டில் நேற்று(28) டயான் ஃபெயின்ஸ்டீன் 90 வயதில் காலமானார்.
பெரிய இழப்பு
இவரது மரணத்தை டயான் ஃபெயின்ஸ்டீனின் தலைமை அதிகாரி ஜேம்ஸ் சவுல்ஸ் இன்று(29) உறுதிப்படுத்தினார்.
Loading...
“அவரது மறைவு அவரை நேசித்தவர்கள், அக்கறை கொண்டவர்கள் முதல் கலிபோர்னியா மக்கள் வரை பலருக்கு ஒரு பெரிய இழப்பாகும்.
அவர் தனது வாழ்க்கையை சேவை செய்ய அர்ப்பணித்தார்” என்று சவுல்ஸ் கூறியுள்ளார்.
டயான் ஃபெயின்ஸ்டீன் “நியாயமான, சரியானவற்றுக்கான போராட்டத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்கவில்லை” என்றும் அவர் கூறினார்.
Loading...








































