உழைக்கும் மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டதன் பின்னரே நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மத்தேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற சமய நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் நிச்சயம் தேர்தல் நடத்தப்படும் என மகிந்த தெரிவித்தார்.
அடுத்தாண்டில் தேர்தல்
அது ஜனாதிபதித் தேர்தலா அல்லது பொதுத் தேர்தலா என்று கூற முடியாது. ஆனால் அடுத்த ஆண்டு தேர்தல் நிச்சயம் நடக்கும். அதற்கு பொதுஜன பெரமுன திட்டமிட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது.
சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமாயின் முதலில் உழைக்கும் மக்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் அதன் பின்னரே அது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.








































