Loading...
இலங்கையின் கடற்படையினரால் நேற்று முன்தினம் 9ஆம் திகதி கைது செய்யப்பட்ட 12 தமிழக கடற்றொழிலாளர்களின் விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கை அவசியம் என்று பாரதீய ஜனதாவின் தமிழக தலைவர் அண்ணாமலை கோரியுள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் அவர் இது தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Loading...
அத்துடன் இலங்கையில் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 இந்திய கடற்றொழிலாளர்கள் நாடு திரும்புவதற்கான வழிகளை ஆராயுமாறும் அவர் தனது கடிதத்தில் கோரியுள்ளார்.
மத்திய அரசாங்கம் கவனம்
இதற்கு முன்னர் தமிழ் நாட்டின் முதலமைச்சரும் இந்த விடயத்தை மத்திய அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































