வெளிநாட்டிலிருந்து வந்த நான்கு பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் சிகரெட் மற்றும் மதுபான போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்தவர்களே இவ்வாறு இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்பெறுமதி மூன்று கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. களனி, வீரகெட்டிய, புத்தளம், கொலன்னாவை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சோதனை நடவடிக்கைகளை தவிர்த்து விமான நிலைய புறப்படும் முனையத்திலிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆடம்பர பொருட்கள் மீட்பு
மடிக்கணினிகள் , கையடக்கத் தொலைபேசிகள் , கையடக்கத் தொலைபேசி பாகங்கள் , வெளிநாட்டு சிகரெட்டுகள், மதுபான போத்தல்கள், வாசனை திரவியங்கள் மற்றும் மோட்டார் கார் பாகங்கள் ஆகியன விமான நிலைய பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.