ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் விசேட ஆளுமைகள் உட்பட பல விடயங்களிலும் தாக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்களுக்கு பிறப்பிலேயே நுண்ணறிவு விதம் அதிகமாக இருக்கும்.
மற்றவர்கள் ஒரு விடயத்தை கற்றுக்கொள்ள ஒரு வாரம் எடுத்துக்கொள்கின்றார்கள் என்றால் இவர்கள் அதே விடயத்தை வெறும் ஒரு நாளில் கற்றுக்கொள்ளும் அளவுக்கு திறமைசாலிகளாக இருப்பார்கள்.
இப்படி பிறப்பிலேயே புத்திசாலிகளாக பிறப்பெடுத்த ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே புத்திகூர்மை கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் கல்வி கற்பதற்காகவே பிறப்பெடுத்தவர்கள் போல் தீவிரமாக படிக்கக்கூடியவர்களாக இருப்பார்கள்.
இவர்களின் திறமையால் இவர்களுக்கு மட்டுமன்றி இவர்களின் பரம்பரைக்கே புகழ் சேர்ப்பார்கள். இவர்களிடம் நினைவாற்றல் அபரிமிதமாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் ஒரே நேரத்தில் பல விடயங்களை கற்றுக்கொள்ளும் அளவுக்கு திறமைசாலிகளாக இருப்பார்கள்.
இவர்களுக்கு பிறப்பிலேயே வணிக ரீதியாக அறிவு காணப்படும். தனது அசாத்திய அறிவாற்றலால் பணம் சம்பாதிப்பதிலும் கில்லாடிகளாக இருப்பார்கள்.
மகரம்
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இயல்பாகவே நினைவாற்றல் அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் புதிய கண்டுப்பிடிப்புகளை மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
இவர்களுக்கு இயல்பிலேயே விரைவில் கற்றுக்கொள்ளும் ஆற்றல் காணப்படுவதால் வாழ்வில் யாரும் எதிர்பாரத வகையில் முன்னேற்றம் அடைவார்கள்.








































