“சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை..” என மணிமேகலை விஜய் டிவி பிரபலங்களை ஜாடையாக தாக்கிய பேசிய சம்பவம் நெட்டிசன்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
மணிமேகலை- பிரியங்கா விவகாரம்
பிரபல தொலைக்காட்சியில் மிக பிரபலமாக செல்லும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சி தன்னுடைய 4 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு தற்போது தன்னுடைய 5 ஆவது சீசனில் கடைசி கட்டத்தில் சென்றுக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொகுப்பாளர் – மணிமேகலைக்கும், குக் – பிரியங்காவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தொகுப்பாளர்- மணிமேகலை நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார். இதற்கான காரணத்தை அவரது யூடியூப் சேனலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இதனை கேட்ட மீடியா பிரபலங்கள் மணிமேகலைக்கு சார்பான கருத்துக்களை அவர்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், பிரியங்கா- மணிமேகலை சம்பவ தினத்தில் குக் வித் கோமாளி செட்டில் பேசிக் கொண்ட ஆடியோ வெளியாகி விவகாரத்தை பெரிதாக்கியுள்ளது.
காட்டமான பதிலடி
இதனை தொடர்ந்து தொகுப்பாளினி பிரியங்கா மணிமேகலையின் தனிப்பட்ட வாழ்க்கையை இழுத்து பேசியுள்ளார்.
அத்துடன் பிரச்சினை ஆரம்பிக்கும் பொழுது மணிமேகலைக்கு சார்பாக பேசிய மீடியா பிரபலங்கள் தற்போது மாற்றி பேசுகிறார்கள். உதாரணமாக குரேஷி, சுனிதா, நடிகை ஷகிலா உள்ளிட்டவர்களை கூறலாம்.
இதற்கு சரியான பதிலடிக் கொடுக்க நினைத்த மணிமேகலை, “ நான் வீட்டைவிட்டு ஓடி வந்து திருமணம் செய்துக் கொண்டேன். இதனை எங்க அம்மாவே கவலைப்படாத போது, இந்த மம்மிக்கு என்ன பிரச்சினை? ” என ஷகிலாவை சுட்டிக் காட்டியுள்ளார்.
இதனிடையே, மணிமேகலையின் கணவர் ஹுசைன் சொம்பிலிருந்து தண்ணீர் கொடுக்க, சொம்பை தூக்கி எறிந்துவிட்டு, “ சொம்புக்கெல்லாம் என்னடா மரியாதை..” என மறைமுகமாக சுனிதாவை தாக்கிப் பேசிக்கிறார்.
ஆக மொத்தத்தில் மணிமேகலைக்கு சார்பாக பேசியவர்கள் அனைவரும் பணம் வாங்கி விட்டு மாற்றி மாற்றி பேசுகிறார்கள் என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளார்.
இது குறித்து மணிமேகலை தன்னுடைய கணவருடன் இணைந்து கேள்வி எழுப்பி வருகிறார்.