Loading...
திருகோணமலை – சேருநுவர, தங்கநகர் பகுதியில் மீன்களை ஏற்றிவந்த லொறி ஒன்று பாதையை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (08-01-2025) காலை இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்த மீன் லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
Loading...
விபத்தின் போது, வாகன சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், வேறு எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading...








































