பிறந்திருக்கும் புத்தாண்டு எப்படி அமையப்போகின்றது என எதிர்பார்ப்பு நம்மிள் பலருக்கும் இருக்கும்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் நாம் சந்தித்த மோசமான சம்பவங்கள் இந்த ஆண்டும் வரக்கூடாது என்று பலரும் பிராத்தணை செய்திருப்போம்.
இப்படியான நம்பிக்கைகளை உடைக்கும் வகையில், சில ஜோதிட வல்லுநர்கள் கணித்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்களின் கணிப்பை மேலை நாடுகளிலேயே ஒரு கூட்டத்தார் கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இதன்படி, தன்னுடைய யதார்த்தமான கணிப்பால் 85 சதவீதமான கருத்துக்களை உண்மையாக்கியவர் தான் பாபா வங்கா. இவரின் கருத்துக்கள் மீது மக்களுக்கு ஒரு நம்பிக்கை இருக்கின்றது.
அந்த வகையில் புதிய ஆண்டு 2025 ஆம் ஆண்டில் என்னென்ன நடக்க போகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
பாபா வாங்கா கூறிய அந்த நற்செய்தி
1. பிறந்திருக்கும் புத்தாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் பெரும் மோதல் வெடிக்கும், உலக நாடுகளின் பொருளாதார பாதிக்கப்படும், பருவ நிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகள் கடுமையாக பாதிக்கப்படும்.
2. 2025 ஆம்ஆண்டில் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்பட்டு ஆய்வுக் கூடங்களில் இதயம், கல்லீரல், கிட்னி, கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் தனியாக உருவாக்கப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. மனித குலத்திற்கு இந்த கணிப்பு புது நம்பிக்கையை கொடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
3. சக்தி வாய்ந்த சூரியப் புயல் இந்த ஆண்டு வீசும் இதன் விளைவாக மின்சாரம் தடைப்படும். பல நாடுகளை இயக்கும் இணைய சேவை, தொலைத் தொடர்பு சேவை உள்ளிட்டவை பாதிக்கப்படும் என பாபா வாங்கா கணித்துள்ளார்.
4. அமெரிக்காவில் ஒருநாள் மின்சாரம் தடைப்பட்டால் 11 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட சூரிய புயலையும் இவர் தான் கணித்துள்ளார். அத்துடன் 2024 ஆம் ஆண்டும் சூரிய புயல் வரும் என்றார். ஆனால் இதன் தாக்கம் நாம் நினைத்தது போல் இல்லை என கூறப்படுகின்றது.
5. பிறந்திருக்கும் 2025 ஆம் ஆண்டில் மனிதர்கள் மனதில் நினைப்பதை அறியும் வகையில் அறிவியல் வளர்ச்சியடையும். இதனால் ஏலியன் வருகை நிச்சயம் பூமியில் இருக்கும் எனவும் கணித்துள்ளார் என சொல்லப்படுகின்றது.