நவகிரகங்களில் இளவரசனாக விளங்கக்கூடிய புதன் பகவான் மிகவும் குறுகிய காலத்தில் தனது இடத்தை மாற்றக் கூடியவர்.
புதன் கல்வி, நரம்பு, படிப்பு, வியாபாரம், புத்திசாலித்தனம் உள்ளிட்டவைக்கு காரணியாக திகழ்ந்து வருகிறார்.
அந்தவகையில், புதன் பகவான் பிப்ரவரி 11ஆம் திகதி மதியம் 12:58 மணிக்கு புதன் கும்ப ராசிக்குச் செல்கிறார்.
மீண்டும் பிப்ரவரி 27ஆம் திகதி இரவு 11:46 மணி வரை புதன் கும்ப ராசியில் இருப்பார், அதன் பிறகு மீன ராசிக்கு பெயர்ச்சி ஆவார்.
இந்நிலையில், புதன் பகவானின் பெயர்ச்சியால் குறிப்பிட்ட 6 ராசிகள் அதிர்ஷ்டங்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
நன்மை ஏற்படும்.
பண வரவு அதிகமாகும்.
பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.
ஆன்மீக வழிபாடு அல்லது மங்களகரமான செயல்களில் ஆர்வம் காட்டுவீர்கள்.
பிப்ரவரி 11 முதல் 27 வரை, அதிர்ஷ்டம் பெருகும்.
அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
திருமண வாழ்க்கை மகிழ்சியாக இருக்கும்.
வாழ்க்கைத் துணையின் உதவியுடன் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
எதிரிகள் மீது ஆதிக்கம் செலுத்துவீர்கள்.
அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றி பெறுவீர்கள்.
நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்பு சாதகமாக வரக்கூடும்.
விருச்சிகம்
நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும்.
முன்னேற்றத்திற்கான பாதை எளிதாக இருக்கும்.
செல்வம் பெருகும்.
அரசாங்கத்திடமிருந்து உதவி கிடைக்க வாய்ப்புள்ளது.
தாய் தந்தையரின் ஆசீர்வாதம் உங்களுடன் இருக்கும்.
வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.
மகரம்
பேச்சுத்திறமை வலுப்பெறும்.
அறிவுத்திறன் மற்றும் பகுத்தறிவு சக்தி அதிகரிக்கும்.
வணிகத்துடன் தொடர்புடையவர்களுக்கு லாபத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
முன்பை விட அதிக லாபம் ஈட்ட முடியும்.
அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும்.
எழுத்துத் துறையுடன் தொடர்புடையவர்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இருப்பார்கள்.
எவ்வளவு கடினமாக உழைக்கிறீர்களோ, அவ்வளவு நிதி ஆதாயத்தை அடைய முடியும்.
கும்பம்
ராஜவாழ்க்கை வாழ்வீர்கள்.
பொருளாதார வசதிகள் அதிகரிக்கும்.
குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும்.
இந்த காலம் மங்களகரமானதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும்.
மீனம்
நல்ல பலன்களை அளிக்கும்.
இவர்களது பணமும் புகழும் அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் இருக்கும்.
திடீர் நிதி ஆதாயம் கிடைக்கும்.
நிண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் வெற்றிகரமாக நடந்துமுடியும்.
தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள், இது நிதி நிலையை வலுவாக வைத்திருக்கும்.