நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடியவர் சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலங்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
ஒன்பது கிரகங்களில், மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனி பகவான், இரண்டரை ஆண்டுகளில் சனி தனது ராசியை மாற்றிக் கொள்கிறார்.
2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் திகதி சனி கும்பத்தில் இருந்து விலகி மீன ராசிக்குள் நுழைகிறார்.
சனி தனது ராசியை மாற்றும் போது, 3 ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனியும், 2 ராசிகளுக்கு சனி திசையும் ஏற்படுகிறது.
இந்நிலையில், ஏழரை நாட்டு சனியால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.
மேஷம்
உடல் ஆரோக்கியம் பாதிக்கும்.
எதிர்கால பிரச்னைகளுக்கு இப்போதே தயாராக இருப்பதால், சவால்களை சமாளிக்கலாம்.
பண விரயம் அதிகம் ஏற்படும்.
செலவுகளில் கவனம் தேவை.
கும்பம்
பண விரயம், பணப்பிரச்னை, மன உளைச்சல் ஆகிய பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
கடின உழைப்பிற்கு, உரிய அங்கிகாரம் கிடைப்பதில் தாமதம் இருக்கும்.
பணியிடத்தில் சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கும்.
இதனால் முன்னேற்றம் தடைபடும்.
மீனம்
வேதனை அளிக்கும் காலமாக இருக்கும்.
பணக் கஷ்டம், மன கஷ்டம் என எல்லா விதத்திலும் பிரச்சனைகள் சூழும்.
இந்த காலகட்டத்தில் பொறுமையுடன் செயல்படவும்.
புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள்.
கவனமாக வாகனத்தை ஓட்டவும்.