ஜோதிடத்தில் பல கிரகப்பெயர்ச்சிகள் காணப்படுகின்றன. ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. நவகிரகங்களில் புதன் கிரகங்களின் இளவரசராக கருதப்படுகிறார்.
எனவே தான் புதனின் கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது. வரும் 26 ம் திகதி கும்ப ராசியில் புதன் உதயமாகிறது.
இதன் காரணத்தால் இது இரண்டு ராசிகாரர்களின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றது. அவர்கள் பல சிக்கல்களையும், தடங்கல்களையும் சந்திக்கலாம். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
மூன்றாவது மற்றும் பன்னிரண்டாம் வீடுகளின் அதிபதியான புதன், கடக ராசிக்காரர்களுக்குளின் எட்டாவது வீட்டில் சஞ்சரிக்கிறார்.
உங்களுக்கு பல எதிர்மறையான மாற்றங்கள் நிகழும்
எந்த வேலையில் எவ்வளவு முயற்ச்சி செய்தாலும் பல சவால்களை தாண்ட வேண்டும்.
வெளிப்பயணங்களை் செல்வதை தவிர்க்க வேண்டும்.
உங்கள் அன்புக்குரியவர்களுடன் தவறான புரிதல்கள் ஏற்படலாம்.
உங்கள் உடன்பிறந்தவர்களுடன் நேர்மறையான உறவைப் பேண முடியாமல் போகலாம்
விருச்சிகம்
புதன் நான்காவது வீட்டில் நிலைபெற்று விருச்சிக ராசியின் எட்டாவது மற்றும் பதினொன்றாவது வீடுகளை ஆளுகிறார்.
யாருடைய ஆதரவும் இல்லாமல் தனி ஆளாக போராட நேரிடும்.
இந்த காலகட்டம் உங்களுக்கு வாழ்க்கையின் மறுபக்கத்தைக் காட்டலாம்.
அலுவலகத்தில் உங்கள் மீது அதிக அழுத்தம் கொடுக்கப்படலாம்.
வேலையின் அதிகரிப்பால் உங்களின் மகிழ்ச்சியைக் கெடுத்துக்கொள்வீர்கள்.
வியாபரத்தைப் பொறுத்தவரை, இந்த காலகட்டத்தில் எதிர்பார்த்த லாபம் வராமல் இருப்பதுடன் நஷ்டமும் அதிகரிக்கலாம்.
பணம் அதிகப்படியாக செலவாகும்.








































