தொகுப்பாளினி மணிமேகலை தனது பிறந்தநாளில் ரசிகர்கள்களை குஷியாக்கும் வகையில் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விஜே மணிமேகலை
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொகுப்பாளர்களுள் ஒருவர் தான் மணிமேகலை.சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக தன்னுடைய மீடியா பயணத்தை ஆரம்பித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.
பின்னர் விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய இவர் மேலும் பிரபல்யம் அடைந்தார். கடந்து 2017 ஆம் ஆண்டு ஹுசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் வெவ்வேறு மதத்தவர்கள் என்பதால் அந்த சமயத்தில் இவர்களுடைய திருமணம் இணையத்தில் பேசுபொருளாக மாறியது.
அதைடியெல்லாம் கடந்த தனது காதல் கணவருடன் மகிழ்சியாக வாழ்ந்து வருகின்றார். சில மாதங்களுகடகு முன்னர் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சயில் பிரியங்கா உடன் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நிகழ்ச்சியைவிட்டு வெளியேறியது இணையத்தில் புயலை கிளப்பியது.
விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினாலும் நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றை மணிமேகலை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில் மணிமேகலை இப்போது விஜய் டிவியில் இருந்து விலகி ஜீ தமிழ் பக்கம் வந்துவிட்டார். தற்போது டான்ஸ் ஜோடி டான்ஸ் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
பிறந்த நாள் நேற்றைய தினம் 7 ஆம் திகதி தொகுப்பாளினி மணிமேகலையின் பிறந்தநாள். ரசிகர்கள், பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வரும் நிலையில், டான்ஸ் ஜோடி டான்ஸ் நடுவர்களான சினேகா ஒரு புடவையும், வரலட்சுமி ஒரு பரிசும் கொடுத்துள்ளனர்.
இதுதவிர 2 ஸ்பெஷல் பரிசுகள் கிடைத்துள்ளதாம், அதனை இந்த வாரத்தில் தெரிவிப்பதாக குறிப்பிட்டு பதிவு செய்துள்ளார். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் மணிமேகலைக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றது.
View this post on Instagram