Loading...
வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
Loading...
இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 33 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் இந்த சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...








































