உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிகை (Forbes) வெளியிட்டுள்ளது.
குறித்த பட்டியலில் பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் தொடர்ந்தும் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
1987ஆம் ஆண்டு முதல் இத்தகைய பட்டியலை அந்த பத்திரிகை வெளியிட்டு வருகிறது.
2025ம் ஆண்டு, ஓகஸ்ட் 1ஆம் திகதி நிலவரப்படி உலகின் முதல் 10 பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் 9 பேர் அமெரிக்கர்கள் ஆவர். ஒருவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்.
401 பில்லியன் டொலர்
பட்டியல் படி உலகின் முதல் பெரும் செல்வந்தர் என்ற இடத்தை பிரபல தொழிலதிபர் எலோன் மஸ்க் தக்க வைத்துக் கொண்டுள்ளதோடு, இவரின் சொத்து அமெரிக்க மதிப்பில் 401 பில்லியன் டொலர் ஆகும்.
அவரைத் தொடர்ந்து லாரி எலிசன் 2ஆவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த பட்டியலில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெர்னார்ட் அர்னொல்ட் 10ஆவது இடத்தில் உள்ளார்.
10 பெரும் செல்வந்தர்கள் பட்டியல் விபரம்…
01. எலோன் மஸ்க் – 401 பில்லியன் டொலர்
02. லாரி எலிசன் – 299.6 பில்லியன் டொலர்
03. மார்க் ஜுக்கர்பெர்க் – 266.7 பில்லியன் டொலர்
04. ஜெஃப் பெசோஸ் – 246.4 பில்லியின் டொலர்
05. லாரி பேஜ் – 158 பில்லியன் டொலர்
06. ஜென்சன் ஹுவாங் – 154.8 பில்லியன் டொலர்
07. செர்ஜி பிரின் – 150.8 பில்லியன் டொலர்
08. ஸ்டீவ் பால்மர் – 148.7 பில்லியன் டொலர்
09. வாரன் பஃபெட் – 143.4 பில்லியன் டொலர்
10. பெர்னார்ட் அர்னொல்ட் – 142.9 பில்லியன் டொலர்








































