நேற்றைய தினம் இறந்து போன நடிகர் மதன் பாபு கடைசியாக பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் மதன் பாப்
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்றவர் தான் நடிகர் மதன் பாப்.
இவர், நடிகர் விஜய்யின் பூவே உனக்காக, ப்ரண்ட்ஸ், கண்ணுக்குள் நிலவு, யூத், நடிகர் அஜித் குமாரின் வில்லன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் உள்பட 100 திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தனது வித்தியாசமான சிரிப்பால் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர், சினிமா நடிகர் மட்டுமின்றி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வந்தார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி நடுவர் உள்ளிட்ட பணிகளையும் செய்தார்.
கடைசியாக பேசிய காணொளி
இந்த நிலையில், நடிகர் மதன் பாபுவுக்கு தற்போது 71 வயது ஆகிறது. சென்னை அடையாறு இல்லத்தில் மதன் பாபு வசித்து வந்தார். நேற்றைய தினம் அவரது வீட்டில் உடல் நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார்.
சினிமாவில் பன்முக கலைஞராக இருந்த மதன்பாபு இளைஞர்கள் வாழ்க்கையில் எப்படியெல்லாம் இருக்க வேண்டும். வெற்றியை எப்படி அடையலாம், மற்றும் வாழ்க்கை வெற்றிப் பெறாதவர்கள் ஏன் வெற்றியை நோக்கி செல்லவில்லை ஆகிய விடயங்கள் குறித்து கடைசியாக பேசிய காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இறப்பதற்கு முன்னர் மதன்பாபு பேசிய கடைசி காணொளி என்பதால் இணையவாசிகள் ஆர்வமாக காணொளியை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.








































