நடிகர் நெப்போலியன் மகன் தனுஷின் திருமணத்தை அமெரிக்க முறைப்படி நடத்தியுள்ள காணொளி வெளியாகியுள்ளது.
நடிகர் நெப்போலியன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் நெப்போலியன், பெரும்பாலும் வில்லனாகவே நடித்துள்ளார். புதுநெல்லு புது நாத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
இவர் ஜெயசுதா என்பவரை 1993ம் ஆண்டு திருமணம் செய்த நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்கா சென்றார்.
இந்தியாவில் தன்னுடைய நடிப்பு, அரசியல் பயணம் என அனைத்தையும் தனது மகனுக்காக விட்டுவிட்டு வெளிநாட்டில் செட்டில் ஆகியுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் மகன் தனுஷிற்கு தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்து வைத்து, உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

அமெரிக்காவில் மீண்டும் திருமணம்
முதலில் ஜப்பானில் நடைபெற்ற நிலையில், தற்போது அமெரிக்கா முறைப்படி திருமணம் செய்து வைத்துள்ளார். இக்காட்சியினை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து நெப்போலியன் கூறுகையில், அன்பு நண்பர்களே , உலகெங்கும் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களே, வணக்கம்…!
உங்களின் அன்போடும் ஆசீர்வாதத்துடனும், அமெரிக்க அரசின் திருமண அனுமதிபெற்று நேஷ்வில்லில் வாழும் நம் தமிழ்ச் சொந்தங்கள், நண்பர்கள் முன்னிலையில், நேஷ்வில் ஶ்ரீ கணேஷ் கோவிலின் மூத்த குருக்களின் வாழ்த்துக்களோடு, அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் தலைமையில், அமெரிக்க முறைப்படி , எங்கள் மகன் தனுஷ்க்கும் & அக்ஷயாவிற்கும் திருமணம் இனிதே நடைபெற்றது…!
உங்களின் மேலான பார்வைக்கும் உங்களின் வாழ்த்துக்களுக்கும்..! நன்றிகள் பல கோடி..! என்றும் பதிவிட்டுள்ளார்.








































