ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை, நிதி நிலை, விசேட ஆளுமை மற்றும் அவர்களின் நேர்மறை, எதிர்மறை குணங்களில் நேரடியாக ஆதிக்கம் செலுத்தும் என நம்பப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே யாருக்கும் அடங்காதவர்களாகவும் சுதந்திரத்தின் மீது தீராக மோகம் கொண்டவர்களாகவும் இருப்பர்கள்.
அப்படி யாராலும் கட்டுப்படுத்தவே முடியாத ஆளுமை கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே போர்குணம் கொண்டவர்களாகவும், சுய விருப்பின் படி இயங்குபவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே தலைமைத்துவ குணம் கொண்டவர்களாக இருப்பதால், எந்த நிலையிலும் மற்றவர்களுக்கு அடிபணியவே மாட்டார்கள்.
இவர்களை கட்டுப்படுத்த நினைத்தால் விளைவுகள் மிகவும் மோசமானதாகவும், எதிர்பாரததாகவும் இருக்கும். யாராலும் இவர்களை அடிமைப்படுத்தவே கட்டுப்படுத்தவோ முடியாது.
மிதுனம்
இரட்டை இயல்புக்கு பெயர் பெற்ற மிதுன ராசியினர், மன ரீதியாகவும் சமூக ரீதியாகவும் எப்போதும் சுதந்திரத்தை விரும்புவார்கள்.
இவர்கள் தங்களின் உணர்வுகளை நெருங்கியவர்களிடமும் கூட வெளிப்படுத்த தயங்குவார்கள். எனவே இவர்களை புரிந்துக் கொள்வது மிகவும் அரிது.
வழக்கமான நடைமுறைகள் அல்லது கடுமையான எதிர்பார்ப்புகளை கட்டுப்படுத்துவது மிதுனத்தின் பட்டாம்பூச்சி மனதிற்கு ஒரு கூண்டு போல தோன்றும். இவர்கள் விதிமுறைகளை வெறுப்பவர்களாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தை புவியியல் ரீதியாகவும், தத்துவ ரீதியாகவும், அனுபவ ரீதியாகவும் ஆராயும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சுதந்திர உணர்வு மற்றும் சாகச இயல்புக்கு பெயர் பெற்ற இவர்கள் யாருக்கும் கட்டுப்பட்டு வாழ மாட்டார்கள். இவர்களை கட்டுப்படுத்தும் இடத்தில் இருந்து முழுமையாகவே அகன்றுவிடுவார்கள்.
பொறுப்புகளில் சிக்கிக்கொள்ள விரும்பாத இவர்களை உறவு முறைகளை காரணம் காட்டியும் கூட கட்டுப்படுத்தி வைக்க முடியாது. இவர்களின் ஒட்டுமொத்த தேவையும் சுதந்திரம் மட்டுமே என்பதில் உறுதியாக இருப்பார்கள்.








































