இலங்கை தமிழரசு கட்சி இன்று (18) வடக்கு கிழக்கில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்த நிலையில் மக்கள் அதனை உதாசீனம் செய்து தமது அன்றாட கடமைகளை முன்னெடுள்ளமை சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில் கடைகளை மூடும்படி மிரட்டிய மட்டக்களப்பு மேயரை பொதுமக்கள் துரத்தியடித்த சம்பவம் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமல்லாது தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளுக்கு நல்ல பாடத்தையும் புகட்டி உள்ளதாக சமூகவலைத்தள வாசிகள் பதிவிட்டுள்ளனர்.
நோகாம நுங்கு சாப்பிட நினைக்கும் தமிழ் அரசியல்வாதிகள்
உள்ளூராட்சி சபைகளில் மக்கள் வழங்கிய அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து PHIஐ அனுப்புவோம் குப்பையை அள்ளமாட்டோம்… வியாபார உரிமத்தை நிராகரிப்போம்…. என தமது தவிசாளர்களை வைத்து மிரட்டியும் பலர் மசியவில்லை என்பது தான் பெரிய பகிடி.
நோகாம ஏ.சி ரூமுக்குள்ள இருந்து கொண்டு ஹர்த்தால் என அறிக்கை விடுவாங்களாம்…. சனம் தன்ட பிழைப்பை விட்டுட்டு சலாம் போடணுமாம் . இந்த நோகாம நுங்கு சாப்பிட நினைக்கும் தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளுக்கு தமிழ் மக்கள் தரமான செருப்படி கொடுத்துள்ளனர்.
குடியிருப்புகளுக்கு மிக அருகில் உள்ள மற்றும் தனியார் காணிகளில் இருக்கும் சில இராணுவ முகாம்களை இடநகர்த்தும் தீர்மானத்தை கொள்கை முடிவாக திசைகாட்டி அரசாங்கம் எடுத்து நீண்டகாலம்.
சம்பவம் நடந்த முத்தையன்கட்டு முகாம் கூட கடந்த ஒரு மாதமாக அகற்றல் செயற்பாட்டில் இருந்த போது தான் தகர திருட்டு சம்பவம் நடந்தது.இந்த நாறிப்போன ஹர்த்தாலால தான் இராணுவம் முகாம்களை கைவிடுது என இனி இவங்கள் கிளம்புவாங்களே என்பதை நினைக்கேக்க தான் லைட்டா கண்ணை கட்டுது என நடிகர் வடிவேலு நகைச்சுவை பாணியில் சமூகவலைத்தளவாசிகள் பதிவிட்டுள்ளனர்.








































