Loading...
கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6.0 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்ட நில அதிர்வில் பலியானோரின் எண்ணிக்கை 800ஐ கடந்துள்ளதுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
குனார் மாகாணம் மிக மோசமான சேதத்தை சந்தித்துள்ளதுடன், முழு கிராமங்களும் அழிக்கப்பட்டுள்ளன.
Loading...
அத்துடன், மலைப்பாங்கான நிலப்பரப்பு மற்றும் தடைபட்ட வீதிகள் காரணமாக மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக மீட்புப்பணியாளர்கள் கூறுகின்றனர்.
சிக்கியுள்ளவர்களை மீட்க உலங்குவானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், உள்ளூர் மருத்துவமனைகள் காயமடைந்தவர்களால் நிரம்பி வழிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...








































