ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகங்களுடைய மாறுதல்களும் நம் வாழ்க்கையில் பலவிதமான நேர்மறை மற்றும் எதிர்மறை தாக்கத்தை கொடுக்கிறது.
அந்த வகையில் தற்பொழுது நடந்து வரும் சில கிரக மாற்றங்களால் சில ராசிகளுக்கு அவர்கள் வாழ்க்கையில் நூறாண்டுகளுக்கு பிறகு ஒரு மிகப்பெரிய தாக்கம் கிடைக்கப் போவதாக சொல்கிறார்கள்.
கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்
மிதுனம்: மிதுன ராசியினருக்கு சனி பகவானுடைய தாக்கம் அவர்கள் வாழ்க்கையில் பொருளாதாரத்தை ஒரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் சொல்லப் போகிறது. இவர்கள் வாழ்க்கையில் யாரையெல்லாம் நம்பி ஏமாந்து நின்றார்களோ அவர்கள் முன் வாழ்ந்து காட்டப் போகிறார். சனி பகவான் அருளால் சிலருக்கு வேலையில் உயர் பதவிகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு.
தனுசு: தனுசு ராசிகளுக்கு சனிபகவானுடைய அருளால் அவர்களுடைய கஷ்டகாலங்கள் விலகி அவர்கள் வாழ்க்கையில் கற்றுக் கொண்ட பாடத்தை வைத்து அவர்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ காத்திருக்கிறார்கள். உடல் நலத்தில் மிகச்சிறந்த மாற்றமும் முன்னேற்றமும் கிடைக்கப் போகிறது. அலுவலகத்தில் இவர்களுக்கான பணி சுமை குறைந்து உயர் பதவிகளை அடையும் நிலை உருவாகப் போகிறது.
மகரம்: நீண்ட நாட்களாகவே மகர ராசியில் மிகவும் துன்பத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். இவர்கள் தற்போது சனி பகவானுடைய சில கிரகம் மாற்றங்களால் அவர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாறுதலை சந்திக்க போகிறார்கள். மனதில் அவர்களுக்கு தெளிவும் நம்பிக்கையும் பிறக்கப் போகிறது. சில நாட்களாகவே மனம் உடைந்து காணப்படும் மகர ராசியினர் சனி பகவானுடைய அருளால் புதிய தொழில் மற்றும் வேலை மாற்றங்கள் செய்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடையப் போகிறார்கள்.








































