Loading...
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண விழாவில் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்காக இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்தாமை தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் கீழ் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவை விசாரிக்க இன்று(11) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கை மின்சார சபைக்கு 2 மில்லியன் ரூபாய்க்கு மேல் பணம் செலுத்தப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Loading...
வழக்கு விசாரணை
பிரதம நீதியரசர் பிரிதி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது.
இதன்போது, மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமை குறித்து வழக்கறிஞர் திஷ்ய வெரகொட நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
Loading...








































