Loading...
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு வாவியின் நீர் மட்டம் உயர்ந்து வாவி பெருக்கெடுத்துள்ளது.
மட்டக்களப்பு வாவி பெருக்கெடுத்ததன் காரணமாக வாவியின் அருகிலுள்ள வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
நீரில் மூழ்கிய பாதைகள்
இதனால் போக்குவரத்து செய்வதில் வாகன சாரதிகளும் ,பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்
Loading...
மட்டக்களப்பு நகரப் பிரதேசங்களிலும் வாவி பெருக்கெடுப்பு காரணமாக குறித்த பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய் நேற்று (17) மாலை வெட்டப்பட்டு மட்டக்களப்பு மாநகர சபை பிரிவில் தேங்கியுள்ள வெள்ள நீர் குறித்த ஆற்றுவாயூடாக கடலை நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளது .

Loading...








































