வீதியில் திரும்ப முற்பட்ட மோட்டார்சைக்கிளை பின்னால் வந்த மோட்டார்சைக்கிள் மோதியதில் தாய் மற்றும் மகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து புத்தளம் வீதி பத்துளுஓயா தாராக்குடிவில்லு பகுதியில் இன்று(01) காலை இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
புத்தளம் பகுதியிலிருந்து பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஒரே திசையில் சென்ற வேளை ,தாயும் மகளும் தமது மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டையிழந்து மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் தாய் மற்றும் மகள் என இருவர் காயமடைந்து முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் மகள் படுகாயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தை ஏற்படுத்திய இளைஞரை முந்தல் பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.







































