Loading...
யாழ்ப்பாணம் – தையிட்டி விஹாரைப் பிரச்சினைக்கு முறையான தீர்வு எட்டப்படும் வரையில், விஹாரை வளாகத்திற்குள் எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விஹாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் உறுதியளித்துள்ளார்.
தையிட்டி விகாரையில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விசேட பூஜைகளுக்கு இடமளிக்கவில்லை
Loading...
எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் விகாரையில் வழமையான பூஜை வழிபாடுகள் மாத்திரமே நடைபெறும் என தேரர் கூறினார்.
அன்றைய தினம் எவ்வித விசேட பூஜைகளுக்கும் தாம் இடமளிக்கவில்லை எனவும் திஸ்ஸ விகாரையின் விஹாராதிபதி ஜின்தோட்டே நந்தாராம தேரர் தெளிவுபடுத்தினார்.
Loading...








































