Loading...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 24 மணிநேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்களும், மூன்று பெண்களுமே இவ்வாறு உயிரிழந்தவர்கள் ஆவர். இதனால் நாட்டில் கொரோனா தொடர்பான இறப்பு எண்ணிக்கை 15,119 ஆக அதிகரித்துள்ளது.
Loading...
இதேவேளை முன்னதாக கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 141 நபர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளை விட்டு வெளியேறியதாக உறுதிபடுத்தப்பட்டது.
இந்நிலையில் இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட கொரோனா இலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 567,077 ஆக அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.
Loading...








































