பல்வேறு நோய்களும் பரவி வரும் இந்த சூழலில் இயற்கை உணவுகளில் நாம் மருத்துவ குணங்களை உணர்ந்து உணவில் சேர்த்து கொள்ளவது அவசியமாகிறது. நம் முன்னோர்கள் இயற்கை மருத்துவத்தை பின்பற்று தான் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து வந்தனர். உணவே மருந்து என்கின்ற பழமொழிக்கு ஏற்ப முருங்கை கீரையில் ஏராளமான நன்மைகள் குவிந்து உள்ளன.
முருங்கையில் பல நோய் எதிர்ப்பு சக்திகள் அடங்கியுள்ளது. இதனை உணவில் சேர்த்து கொள்ளவதால் உடலுக்கு விட்டமின் ஏ கிடைக்கின்றது. அதே போல விட விட்டமின் பி 2 வாழைப்பழத்தில் உள்ளதவை விட 50 மடங்கு முருங்கையில் அதிகமாக உள்ளது.
முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் சேட்டு சாப்பிட்டால் பித்த மயக்கம், மலசிக்கல், கண் நோய் போன்றவை குணமாகும். அதேபோல உடல் சூடு அதிகமாக இருப்பவர்கள் வாரத்தில் மூன்று முறை முருங்கை கீரை சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
விட்டமின் சி ஆரஞ்சு பழங்களில் உள்ளதை விட 7 மடங்கு முருங்கை தண்டில் அதிகமாக உள்ளது. முருங்கை இலைப் பொடியானது தோல் நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சர்க்கரை நோயாளிகள் டீ அல்லது காபியுடன் முருங்கை இலைப் பொடியை கலந்து உட்கொள்வதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. முருங்கை கீரையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் இரத்த சோகை வராமல் தடுக்கலாம். முருங்கை கீரையில் உள்ள சாறு உடல் எலும்புகளை வலிமைப்படுத்த உதவும்.








































