காலை வெறும் வயிற்றில் நீங்கள் எடுத்துக்கொள்ளும் இந்த உணவுகள் நாள் முழுவதும் உங்கள் ஜீரண சக்தியைச் சீராக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலுக்கு சுறுசுறுப்பு தரும்.
ஊற வைத்த பாதாம் :
இதில் அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கான வைட்டமின்கள் மற்றும் மினரல்களை அளிக்கின்றன. நாள் முழுவதும் விரதம் இருந்தாலும் 5-10 பாதாம் சாப்பிட்டால் தேவையான ஊட்டச்சத்து கிடைத்துவிடும்.
நெல்லிக்காய் ஜூஸ் :
நீண்ட நாள் வாழக்கூடிய வாய்ப்பு வேண்டுமெனில் அது நெல்லிக்காய் மூலம் கிடைக்கிறது. நெல்லிக்காயில் உள்ள அல்கலைன் ஜீரண மண்டலத்தை சுத்தம் செய்து உறுதியாக்குகிறது. உங்கள் சருமமும் ஹெல்த்தியாக இருக்கும்.
பப்பாளி :
கெட்ட கொழுப்புகளை அகற்றுவதில் பப்பாளி சிறந்தது. வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடல் உறுப்புகள் சீராக இயங்க உதவும். பப்பாளி சாப்பிட்டால் 1 மணி நேரம் வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.








































