Loading...
பிரேசிலில் விடிய விடிய அறுவை சிகிச்சை செய்து தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை பிரித்து எடுத்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிரேசிலில் தலை ஒட்டி பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு 27 மணிநேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
ஆர்தர் மற்றும் பெர்னார்டோ லிமா எனப் பெயரிடப்பட்ட இந்த இரட்டை குழந்தைகளின் தலைப்பகுதி ஒட்டியப்படியே இருந்தது.
Loading...
அவர்கள் மூளையின் ஒரு பகுதியையும், இதயத்திற்கு இரத்தத்தை மீண்டும் கொண்டுசெல்லும் முக்கிய நரம்பையும் பகிர்ந்து கொண்டனர்.
இங்கிலாந்தின் கைதேர்ந்த மருத்துவர் தலைமையிலான குழுவினர் விர்ச்சுவல் ரியாலிட்டி கணிப்புகளைப் பயன்படுத்தி பல மாத ஆராய்ச்சியின் மூலம் அறுவை சிகிச்சை செய்து, இரண்டு தலைகளையும் பிரித்துள்ளனர்.
இந்த சாதனை அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
Loading...








































