டிக்டொக் மூலம் அறிமுகமான பாடசாலை மாணவியை திருகோணமலை கந்தளாய் ஈச்சலம்பட்டு கடற்கரையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக பாடசாலை மாணவன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈச்சலம்பட்டு பெலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாணவி அப்பகுதியில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையில் படிக்கும் மாணவி என கூறப்படுகின்றது.
பொலிஸாரிடம் மாணவி புகார்
சந்தேக நபர் டிக்டொக் மூலம் மாணவியுடன் அறிமுகமாகியுள்ளார். அதன்பின்னர், நேரடியாக பேசவேண்டுமெனக் கூறி, லங்கா பட்டுன விஹாரைக்கு பின்னால் உள்ள கடற்கரைக்கு அழைத்து வந்துள்ளார்.
மாணவியும் மாணவனும் பேசிக் கொண்டிருந்தபோது, மாணவனின் மூன்று நண்பர்களும் அங்கு வந்தனர், அதோடு மாணவியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக ஈச்சலம்பட்டு பொலிஸாரிடம் மாணவி புகார் அளித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணையின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரும் அவரது மூன்று நண்பர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஈச்சலம்பட்டு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.








































