இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் “ட்ரிக்கர்”.
இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள படம் “ட்ரிக்கர்”. இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். மேலும், சீதா, அருண்பாண்டியன், முனீஷ்காந்த், சின்னிஜெயந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.
ட்ரிக்கர்
ப்ரமோத் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆக்ஷன், த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. மிகவும் துள்ளலாக உருவாகியுள்ள இந்த பாடலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் அதர்வா “யார் வந்து சுட்டாலும் சீறும் தோட்டா” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.








































