- தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ்.
- ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.
ஆதிபுருஷ்
மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.
ஆதிபுருஷ் படக்குழு
இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வரும் அக்டோபர் 2-ம் தேதி அயோத்தி நகரில் உள்ள சராயு நதிக்கரை ஓரத்தில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








































