- கடைசி நேரத்தில் உடல்தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மறுபடியும் விலகியுள்ளார்.
- 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புகிறார்கள்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.
20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் அணிக்கு திரும்புகிறார்கள். கடைசி நேரத்தில் உடல் தகுதியை எட்டிவிட்டதாக சேர்க்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மறுபடியும் விலகியுள்ளார்.
இந்நிலையில் இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் பகல்- இரவு போட்டியாக இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-
இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல், அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, உம்ரான் மாலிக், முகமது சிராஜ்.
இலங்கை: குசல் மென்டிஸ் (விக்கெட் கீப்பர்), பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, தனஞ்ஜெயா டி சில்வா, சாரித் அசலங்கா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, மதுஷன்கா, துனித் வெல்லலகே.