Loading...
கிரீஸின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், அதிகளவானவர்கள் காயமடைந்துள்ளனர்.
ஏதென்ஸிலிருந்து தெசலோனிகிக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில், தெசலோனிகியில் இருந்து லாரிசா நகர் நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு ரயிலுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
இதில் ரயில் பெட்டிகள் ஒன்றோடொன்று தடம் புரண்டு தீ பற்றியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Loading...
இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 32 பேர் இதுவரை உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் காயமடைந்தனர்.
விபத்து நேரிட்ட இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், ரயில் பெட்டிக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Loading...








































