Loading...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மலையகத் தமிழர்களை இலங்கை சமூகத்துடன் முழுமையாக இணைத்துக்கொள்வது தொடர்பான ஜனாதிபயின் ஆலோசகராகவே வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
Loading...
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை அமைப்பாளர் பதவியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நீக்கப்பட்ட நிலையில் இந்த புதிய பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களித்தமைக்காக ஐக்கிய மக்கள் சக்தி இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.
Loading...








































