Loading...
சீனாவின் கன்சு, குயின்காங் ஆகிய மாகாணங்களில் அண்மையில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது.
6.2 ரிச்டர் அளவில் பதிவாகியிருந்த குறித்த நிலநடுக்கமானது 10 கி.மீ ஆழத்தில் உருவானதாக சீன வானிலை மையம் தெரிவித்திருந்தது.
Loading...
இதேவேளை சீனாவில் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பினைக் குறித்த நிலநடுக்கமானது ஏற்படுத்தியிருந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
அத்துடன், 980 பேர் காயமடைந்துள்ளனர் எனவும், 10,000 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...








































