கின்னஸ் உலக சாதனை படைத்த உலகின் மிகப் பழமையான கோழி உயிரிழந்துள்ளது.
ஒரு கோழியின் சராசரி ஆயுட்காலம் பொதுவாக ஐந்து முதல் பத்து ஆண்டுகள் வரை என விஞ்ஞான ரீதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், ஒரு கோழியின் சராசரி ஆயுட்காலத்தை தாண்டி 21 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த பீனட் எனப்படும் குறித்த கோழியே இவ்வாறாக கடந்த மாதம் 25 ஆம் திகதி உயிரிழந்துள்ளது.
கின்னஸ் சாதனை
அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த தம்பதியினர், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளுடன் பண்ணை வைத்துள்ளனர்.
இந்த தம்பதியினரால் வளர்க்கப்பட்ட பீனட் எனப்படும் கோழி உலகின் மிகப் பழமையான கோழி எனும் கின்னஸ் உலக சாதனையை தனது 20 ஆவது வயதில் பதிவு செய்தது.
பீனட்டுக்கு தாம் வழங்கிய ஆரேக்கியமான உணவு காரணமாக, அது 21 ஆண்டுகள் உயிர் வாழ்ந்ததாக அதன் உரிமையாளர் மார்சி பார்க்கர் டார்வின் தெரிவித்துள்ளார்.
கவலை வெளியிட்டுள்ள உரிமையாளர்
21 ஆண்டுகளும் 238 நாட்களும் உயிர் வாழ்ந்து, சாதனை படைத்து விட்டு பீனட் சென்றமை குறித்து மார்சி பார்க்கர் டார்வின் கவலை வெளியிட்டுள்ளார்.
பீனட் உயிரிழந்தாலும், அதன் நினைவுகள் எப்போதும் தம்முடன் இருக்குமென அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, பீனட்டிற்கு முன்பு, மஃபி என்ற கோழி மிகப் பழமையான கோழியாக 23 வயது வரை உயிர் வாழ்ந்து, கடந்த 2011 ஆம் ஆண்டு இறந்தமை குறிப்பிடத்தக்கது.








































